இந்தியா

முதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட ரத்த மாதிரி

முதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்டுசெல்லப்பட்ட ரத்த மாதிரி

webteam

முதல் முறையாக உத்தரகாண்டில் ட்ரோன் மூலம்  ரத்த மாதிரி 32 கிலோ மீட்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உலக அளவில் ட்ரோன் போட்டோகிராபி, வீடியோகிராபி, தட்ப வெட்பநிலையை அறிதல், காவல்துறை, விளையாட்டு என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

சில நாட்களுக்கு முன்பு உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சிறுநீரகத்தை சுமந்து சென்றது.

இந்நிலையில், முதல் முறையாக உத்தரகாண்டில் ட்ரோன் மூலம் ரத்த மாதிரி 32 கிலோ மீட்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நந்தகான் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து தெஹ்ரி மருத்துவமனைக்கு இந்த ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் , ''சாதாரணமாக 32 கிலோமீட்டரை கடந்து செல்ல 50 - 60 நிமிடங்கள் ஆகும் எனவும் ஆனால் ட்ரோன் பயன்பாட்டால் 18 நிமிடங்களில் குறிப்பிட்ட மருத்துவமனையை ரத்த மாதிரி அடைந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளனர்