’கர்பா’  முகநூல்
இந்தியா

’கர்பா’ நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு! 24 மணி நேரத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணங்கள்

குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது ‘கர்பா’ நடனம் ஆடிய 10 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்

ஜெனிட்டா ரோஸ்லின்

குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனத்தின் போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நடனமாடியவர்களில் 10 பேர் மாரடைப்பால உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் வெகு விமர்சையாக 9 நாள்கள் கொண்டாடப்படும் பண்டிகைதான் நவராத்திரி.

’கர்பா’

இப்பண்டிகையின் போது 9 நாட்களின் இரவிலும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ’கர்பா’ என்று அழைக்கப்படும் பாரம்பரிய நடனத்திற்கேற்றவாரு உடை அணிந்து, அலங்கரித்து நடனமாடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ’கர்பா’ நடமானது இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரழந்துள்ள சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதில் இறந்தவர்கள் இளைஞர்களாகவும் இளம் பெண்களாகவுமே இருக்கின்றனர் என்றும், நவராத்திரி தொடங்கிய 6 நாட்களில் நடமானமாடிய 600 க்கு மேற்பட்டோருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, ”கர்பா நடனம் நடைபெறும் இடங்களில் டாக்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களை வைக்க வேண்டும்” என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது கர்பா நிகழ்ச்சியின் பயிற்சியின் போது 3 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் என்பது முந்தைய ஆண்டுகளிலும் நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.