இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதி வேண்டும் - சிறையிலுள்ள எம்எல்ஏக்கள் மனுதாக்கல்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதி வேண்டும் - சிறையிலுள்ள எம்எல்ஏக்கள் மனுதாக்கல்

Sinekadhara

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறையில் இருக்கக்கூடிய நிலையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகிய இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வழக்கு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளைய தினம் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில ஆளுநர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு கெடு விதித்து இருக்கக்கூடிய நிலையில் நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தங்களை அனுமதிக்குமாறு வடிவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களது மனு இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மேலவை தேர்தலில் வாக்களிக்க தங்கள் இருவரையும் அனுமதிக்க வேண்டும் என தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிரான மனு மீதான விசாரணையும் இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.