மும்பை பங்கு சந்தை  PT
இந்தியா

தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிரொலி | பங்குச் சந்தையில் சரிவு, லாபம் கொடுக்கும் நிறுவனங்கள் எவை எவை?

Jayashree A

கடந்த சில நாட்களாக தேர்தல் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ‘பாஜக-வே மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஆகவே, அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏதும் வராது’ என்ற நிலை இருந்துவந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். இதையடுத்து பங்குச் சந்தையானது கடந்த நாட்களில், ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. அதன்படி நேற்று தேசிய பங்குசந்தையான நிப்டி 23,263.90 புள்ளிகளும் மும்பை வர்த்தகமான சென்செஸ் 76468.78 புள்ளிகளில் வர்த்தகமானது முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், தேர்தலின் எதிரொலியாக பங்கு சந்தையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி மும்பை பங்கு சந்தை 76,285.78 புள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகமானது 2000 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

சரிவில் பங்கு சந்தை

அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 23179.50 புள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகமானது, 1000 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் மருந்து நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கணினி நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி பங்குகள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருகிறது.

முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் பங்குகள்

அதன்படி HUL, cipla, nritannia, sunpharma, nestle, tata con.product, asain paints, divis labs, HCL Tech, TCS, Hero Motocorp ஆகியவற்றின் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்து வருகிறது.

சரிவை சந்தித்து வரும் பங்குகள்!

இதில் reliance, chamblfert, jk cement, MFSL, tata steel, M&Mfin போன்ற பங்குகள் இறக்கத்தை சந்தித்து வருகின்றது.