பிபார்ஜோ புயல் கோப்பு புகைப்படம்
இந்தியா

அரபிக்கடலில் உருவான புயல் இன்று தீவிர புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் உருவான பிபார்ஜோ புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்வதாகவும், இன்று தீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

PT WEB

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நேற்று மாலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு பிபார்ஜோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் பரிந்துரைத்துள்ள பிபார்ஜோ என்ற பெயருக்கு 'ஆபத்து' என்ற பொருளை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல்

இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்க டலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.