இந்தியா

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு மானியங்கள் இல்லை: உ.பி.யில் வருகிறது புதிய கட்டுப்பாடு

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு மானியங்கள் இல்லை: உ.பி.யில் வருகிறது புதிய கட்டுப்பாடு

kaleelrahman

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலைகள், அரசு மானியங்கள் கிடைக்காது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உத்தரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட உள்ளது.

இது போன்ற அம்சங்கள் உத்தரப் பிரதேச அரசு உருவாக்கியுள்ள மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேச அரசின் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள இந்த வரைவு மசோதா குறித்து பொது மக்கள் வரும் 19ஆம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

2 குழந்தைக்குள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 2 முறை ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளும் இந்த வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 20 கோடி பேர் வசிக்கின்றனர். இது பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது