மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. ஆனாலும் ரயில் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. வெளிமாநில தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், 'அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார்'' எனத் தெரிவித்துள்ளார்.