162 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில், குடியரசு தினத்தில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்த நீராவி ரயிலின் பெயர், ஃபெர்ரி குயின்(fairy queen).இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட இந்த ரயில் 1855ம் ஆண்டு முதல் மேற்குவங்கம் - ஹவுரா இடையே இயக்கப்பட்டது. 54 ஆண்டுகள் ரயில்வேயில் சேவையாற்றிய இந்த ரயில், 1908ம் ஆண்டு ஓய்வு பெற்றது. மீண்டும் ரயில்வேயால் புதுப்பிக்கப்பட்டு இந்த ரயில் பிப்ரவரி 1,1997 முதல் டெல்லியில் இருந்து ஆல்வார் வரை மீண்டும் இயக்கப்பட்டது.
சென்னை பெரம்பூரில் தான் இந்த ரயிலை புதுப்பிக்கும் பணி நடைப்பெற்றது. உலகளவில் பயன்பாட்டில் உள்ள பழமையான நீராவி ரயில் என்ற பெருமைக்கு உரியது இந்த ரயில். ஃபெர்ரி குயின் கின்னஸ் புத்தக்கத்திலும் இடம்பெற்றுவிட்டது. தேசிய சுற்றுலா விருதையும் இது பெற்றது.
2011ம் ஆண்டில் இந்த ரயில், பயணிக்கத் தகுதியற்றதாக ரயில்வேயால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசு தினத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து டெல்லி சந்திப்பு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது.