icicii, Madhabi Puri Buch pt web
இந்தியா

செபி தலைவர் மாதபி புச் விவகாரம்.. ஐசிஐசிஐ நிர்வாகம் விளக்கம்

செபி தலைவர் மாதபி புச் விதிமுறைகளை மீறி ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

PT WEB

செபி தலைவராக பணியாற்றி வரும் மாதபி புச், ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றதாக அவ்வங்கி நிர்வாகம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஓய்வுகால பலன்களை தவிர அவருக்கு ஊதியமோ, இ.எஸ்.ஐ.பி. பலனையோ ஐசிஐசிஐ வங்கி அல்லது ஐசிஐசிஐ குழும நிறுவனங்கள் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபியின் தலைவர் மாதபி புரி புச்

மாதபி புச் விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் 16.8 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

ஏற்கனவே, அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தில் மாதபி புச்சிற்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்த நிலையில், தற்போது இந்த சர்ச்சை எழுந்துள்ளது.