இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

நிவேதா ஜெகராஜா

விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அனோகோவாக்ஸ் என்ற அந்த தடுப்பூசி ஹரியானாவிலுள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இதை மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் காணொளி வாயிலாக அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், `கொரோனாவின் டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய இரு திரிபுகளையும் நடுநிலைப்படுத்தக்கூடிய வகையிலான நோய் எதிர்ப்பு திறனை அனோகோவாக்ஸ் பெற்றுள்ளது. நாய்கள், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.