இந்தியா

கார் விபத்தில் பத்திரிகையாளர் பலி: ஐஏஎஸ் அதிகாரிக்கு 14 நாள் காவல்!

கார் விபத்தில் பத்திரிகையாளர் பலி: ஐஏஎஸ் அதிகாரிக்கு 14 நாள் காவல்!

webteam

கேரளாவில் கார் விபத்தில் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மலையாள நாளிதழ் ஒன்றின் திருவனந்தபுரம் செய்தியாளராக பணியாற்றியவர் கே.எம்.பஷீர் (35). மலப்புரத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள மியூசியம் சாலையில் பைக்கில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார். 

விபத்தை ஏற்படுத்திய காரில் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் இருந்ததாகவும் அவர் போதையில் காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவரும் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

(பஷீர்)

தான் காரை ஓட்டவில்லை என்றும் தனது பெண் நண்பர் வாஃபா பெரோஸ்தான் காரை ஓட்டியதாகவும் அதிகாரி ஸ்ரீராம் போலீ சாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், நேரில் பார்த்தவர்கள் ஸ்ரீராம்தான் காரை வேகமாக ஓட்டி வந்ததாகத் தெரிவித்துள் ளனர். மதுவிருந்தில் கலந்துகொண்ட அவர், அதிகமாக குடித்துவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்தார் என்றும் அதனால் அந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரித்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைக்கு வந்த மாஜிஸ்திரேட், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

பத்திரிகையாளர் முகமது பஷீர் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மறைந்த பஷீருக்கு ஜசீலா என்ற மனைவியும் ஜன்னா, ஆஸ்மி என்ற குழந்தைகளும் உள்ளனர்.