இந்தியா

அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைக்கு துணிச்சல் விருது

அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைக்கு துணிச்சல் விருது

Rasus

விங் கமாண்டர் அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைப்பிரிவுக்கு துணிச்சலுக்கான விருது கிடைத்துள்ளது.

பாகிஸ்தானின் பாலகோட்டில் விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட விமானப்படை வீரர்களுக்கு துறை ரீதியிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் எஃப் 16 போர் விமானத்தை தாக்கி அழித்த விங் கமாண்டர் அபிநந்தனின் 51-வது படைப்பிரிவின் துணிச்சலை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை 51-வது படைப்பிரிவின் குழுத் தலைவர் கேப்டன் சதீஷ் பவார் பெற்றார். ஆப்ரேஷன் BANDAR என்ற பெயரில் மிராஜ் 2000 போர் விமானத்தை வைத்து பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த படைப்பிரிவு எண் ஒன்பதுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலை தவிடு பொடியாக்கிய 601 என்ற ராணுவ சிக்னல் பிரிவின் தலைவர் மின்டி அகர்வால் என்ற பெண் அதிகாரியின் துணிச்சலைப் பாராட்டியும் விருது வழங்கப்பட்டுள்ளது.