பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உமாபாரதி, தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னைப் பதவி விலகச் சொல்ல, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு எந்தவித அருகதையும் கிடையாது என்றும் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அமைச்சர் உமா பாரதி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்ததை வரவேற்றுள்ள காங்கிரஸ். உமாபாரதி மற்றும் கல்யாண் சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது.