இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினால் பாலியல் அச்சுறுத்தல் கொடுக்கிறார்கள்: நடிகை ஜமீலா ஜமீல்

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினால் பாலியல் அச்சுறுத்தல் கொடுக்கிறார்கள்: நடிகை ஜமீலா ஜமீல்

Veeramani

'விவசாயிகளின் போராட்டம் பற்றி நான் பேசும் ஒவ்வொரு முறையும் எனக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்கள் வருகின்றன' என்று இங்கிலாந்து நடிகை ஜமீலா ஜமீல் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து நடிகை ஜமீலா ஜமீல் இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள பதிவில், "நான் இந்தியாவில் விவசாயிகளைப் பற்றி பலமுறை பேசியிருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறை நான் பேசும் நான் கொலை மிரட்டல்களையும், பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களையும் சந்திக்கிறேன்.  

நீங்கள் எனக்கு அழுத்தம் கொடுக்கும்போது, நான் ஒரு மனிதர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேலும் "இந்த விஷயத்தில் பேசும் ஆண்களுக்கும் நீங்கள் அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று ஜமீலா தெரிவித்திருக்கிறார்.