இந்தியா

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பாஜக ஏன் பயப்படுகிறது? - மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பாஜக ஏன் பயப்படுகிறது? - மம்தா பானர்ஜி

webteam

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பாஜக ஏன் பயப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேற்கு வங்கத்தில் எனது ஆட்சியை பாஜகவால் தடுக்க முடியவில்லை. மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றமைக்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவரும் போனில் வாழ்த்து தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் அனைவரையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கிறேன். நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பாஜக ஏன் பயப்படுகிறது?” என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆனால் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதலில் வெற்றி என அறிவிக்கப்பட்டு பின்னர் தோல்வி என அறிவிக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.