இந்தியா

ஏடிஎம்.மில் பணத்தட்டுப்பாடா? கற்பனையா சொல்றாங்க: அமைச்சர் தகவல்!

ஏடிஎம்.மில் பணத்தட்டுப்பாடா? கற்பனையா சொல்றாங்க: அமைச்சர் தகவல்!

webteam

நாட்டில் 80 சதவிகித ஏடிஎம்களில் பணம் இருப்பதாக தாம் நம்புகிறேன் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரே இரவில் வெளியான அறிவிப் பால் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். ஏடிஎம்கள், வங்கிகள் என எங்கும் பணம் இல்லாமல் அவதிப் பட்டனர். அந்தப் பிரச்னை பின்னர் மெதுமெதுவாகச் சரியானது. இந்நிலையில் தற்போது மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் பணம் நிரப்பப்படாமல் ஏடிஎம் மைய சேவை முற்றிலும் முடங்கி யுள்ளது. இதனால் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இதுபற்றி கூறிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, ‘நாட்டில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணம் இருக்கிறது என்று நம்புகிறேன். சிலர் கற்பனையாக, பணம் இல்லை என்று நாட்டு மக்களை திசை திருப்புவதை வழக் கமாக வைத்திருக்கிறார்கள். இதுபோன்று செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.