இந்தியா

ஆபாசத்தை தூண்டும் "லேயர் சாட்" விளம்பரத்தை ஒளிபரப்ப தடை!

ஆபாசத்தை தூண்டும் "லேயர் சாட்" விளம்பரத்தை ஒளிபரப்ப தடை!

ச. முத்துகிருஷ்ணன்

இந்தியாவில் ஆபாசத்தை தூண்டும் வகையில் ஒளிபரப்பப்பட்ட "லேயர் சாட்" எனப்படும் வாசனை திரவிய விளம்பரத்திற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"லேயர் சாட்" எனப்படும் வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம் ஆபாசத்துடன் இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் பதிவானது. மேலும் விளம்பரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி பெண்கள் நல ஆணையம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருந்தனர்

இந்நிலையில் இந்த சர்சசை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் "லேயர் சாட்" நிறுவனத்தின் விளம்பரங்களை ஒளிபரப்ப தடைவிதித்துள்ளது. மேலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இந்த விளம்பரத்தை ஒளபரப்ப வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.