இந்தியா

“சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகுவதால் வருத்தம்” - சசி தரூர்

“சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகுவதால் வருத்தம்” - சசி தரூர்

webteam

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கட்சியிலிருந்து விலகுவதைக் கண்டு வருந்துவதாக அக்கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சசி தரூர், “சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகுவதை கண்டு வருத்தமடைகிறேன். அவரை கட்சியில் சிறந்த நபர்களில் ஒருவராகவும், எதிர்காலமாகவும் நினைத்திருந்தேன், ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவர் கட்சியிலிருந்து விலகுவதை விட, இணைந்து செயல்பட்டு கட்சியை மேலும் திறம்பட செயல்படுத்தி முன்னேற்றம் காணலாம், எங்கள் கனவுகளையும் நிறைவேற்றலாம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உட்கட்சி பூசலில் துணை முதலமைச்சரும், மாநில தலைவருமான இருந்த சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அத்துடன் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை 2வது நாளாக அவர் புறக்கணித்தார். இதனால் அவரை துணை முதலமைச்சர் பதவியிலிருந்து காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.