இந்தியா

“பெயரை மாற்றலாம், கை ரேகையை மாற்ற முடியுமா?” - ரவிசங்கர் பிரசாத்

“பெயரை மாற்றலாம், கை ரேகையை மாற்ற முடியுமா?” - ரவிசங்கர் பிரசாத்

rajakannan

மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த முடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கி மற்றும் வருமானவரி கணக்கு எண் ஆகியவற்றைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. இதன்மூலம் போலி ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் கொலை செய்துவிட்டு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தப்பிச் செல்லும் ஒருவர், இனி பிடிபட்டு விடுவார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அவரது விரல் ரேகையை மாற்ற முடியாது” என்று கூறினார்.