இந்தியா

தெலங்கானா என்கவுன்ட்டர்: சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு மறுபிரேத பரிசோதனை

தெலங்கானா என்கவுன்ட்டர்: சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு மறுபிரேத பரிசோதனை

jagadeesh

தெலங்கானா என்கவுன்ட்டரில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தலைமையில் மூன்று மருத்துவர்கள் நாளை காலை 9 மணியளவில் மறு பிரேத பரிசோதனையை செய்ய இருக்கின்றனர். பெண் மருத்துவரை பாலியல் ‌வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் 4 பேரை தெலங்கானா காவல்துறை ‌டிசம்பர் 6ஆம் தேதி சுட்டுக்கொன்றது.

என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நான்கு பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நான்கு பேரின் உடல் காந்தி மருத்துக் கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை நாளை மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய தெலங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.