இந்தியா

ஹைதராபாத் மெட்ரோ ரயிலை இன்று கொடியசைத்து துவங்கி வைக்கிறார் மோடி!

ஹைதராபாத் மெட்ரோ ரயிலை இன்று கொடியசைத்து துவங்கி வைக்கிறார் மோடி!

webteam

தெலங்கானா மாநிலத்தில் தொடங்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் மெட்ரோ சேவை திட்டம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் சேவை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன் தொடக்க விழா இன்று மதியம் 2:15 மணியளவில் துவங்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரயிலை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். அவருடன் தெலங்கானா முதல்வர், சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர், மியாபூரிலிருந்து குகட்பள்ளி வரை செல்லும் மெட்ரோ ரயிலில் மோடி, அமைச்சர்களுடன் பயணிக்கிறார்.

முதல் கட்டமாக நாகோல் முதல் மியாபூர் வரை 30 கி.மீ ரயில் சேவை துவங்கப்படுகிறது. இதில் மொத்தம் 24 மெட்ரோ ஸ்டேஷன்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்படும் இந்த மெட்ரோ ரயில் நாளை முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. மேலும் மக்களின் பாதுகாப்பிற்காக இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள், 546 தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.