இந்தியா

புகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு

புகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு

rajakannan

தன் மீது புகார் கொடுத்த மனைவியை காவல்நிலையம் முன்பாகவே கணவன் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள பெகம்பெட் காவல் நிலையம் ஒன்றின் முன்பாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கத்தியால் தாக்கிய சையது ரஹ்மான்(35) என்ற அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த மனைவி கவுசல் பேகம் மற்றும் 4 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரஹ்மான், பேகம் இருவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு குடிக்க பணம் கேட்டு மனைவியை கணவர் ரஹ்மான் கொடுமைபடுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், தனது கணவரிடம் இருந்து கவுசல் பேகம் பிரிந்து வந்துள்ளார். பிரிந்து வந்த பிறகும் மனைவியை ரஹ்மான் விடுவதாக இல்லை. பேகம் வேலை செய்யும் இடத்திற்கே சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இன்று காலையும், பணம் கேட்டு பேகம் வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கணவரின் கொடுமையால் விரக்தியடைந்த பேகம் தனது உறவினர்களுடன் பெகம்பெட் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகார் அளித்து வெளியே வந்த கவுசல் பேகம் மற்றும் அவரது உறவினர்கள் மீது ரஹ்மான் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். காவல்நிலையம் முன்பே நடைபெற்ற இந்தச் சம்பத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.