Swiggy x page
இந்தியா

சைவ உணவில் எலும்பு.. பிரியாணியில் புழு.. ஸ்விக்கி மீது அடுத்தடுத்து குற்றஞ்சாட்டிய பயனர்கள்.. #Photo

Prakash J

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுப் பொருட்களில் பூச்சிகள், புழுக்கள் கிடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் பதிவிடும் வீடியோக்களை இணையதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. சமீபத்தில்கூட, ஐஸ்கிரீமில் விரல் இருந்த செய்தி ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில், ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் புழு இருந்ததும், மற்றொரு நபருக்கு சைவ உணவில் எலும்புத் துண்டு வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள ஸ்விக்கி டெலிவரி மூலம் இரு பயனர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தங்களுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

சாய் தேஷா என்ற பயனர், கடந்த 23ஆம் பதிவிட்டிருக்கும் பதிவில், தாம் ஆர்டர் செய்த பிரியாணியில் புழு இருந்ததாகவும், அந்த உணவுக்காக ரூ.318 செலுத்தியதாகவும், பின்னர், இதுகுறித்து Swiggyயிடம் புகார் அளித்தபோதிலும், ரூ.64 மட்டுமே திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கனடா| பகுதி நேர வேலைக்காக காஃபி ஷாப் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள்!

மேலும் அவர், அதுதொடர்பான படங்களையும் வெளியிட்டு, "தயவுசெய்து மெஹ்ஃபில் குகட்பல்லி ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள்" ஸ்விக்கி கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் ஒருவருடன் தனது உரையாடலின்போது நடைபெற்ற ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதற்கு அவர், ’உணவின் பேக்கிங் உணவகங்களால் மட்டுமே கையாளப்படுகிறது’ என்பதை தெளிவுபடுத்தினார். தொடர்ந்து, ஸ்விக்கி தனது பிரியாணிக்கான முழுப் பணத்தையும் சாய் தேஜாவுக்கு வழங்கியதோடு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் (FSSAI) முறையான புகாரைப் பதிவு செய்யும்படி ஊக்குவித்தது.

இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாளான இன்று, அவினாஷ் என்ற பயனர் மீண்டும் ஸ்விக்கி மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் தனது பதிவில், ‘பனீர் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளேன். அதில் எனக்கு ஒரு எலும்புத் துண்டு கிடைத்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில், Swiggy இன் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி ஒருவர், "வணக்கம், உங்கள் சைவ ஆர்டரில் அசைவப் பொருளைப் பெற்றுள்ளதைக் கேட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தயவுசெய்து ஆர்டர் ஐடியைப் பகிரவும், அதனால் நாங்கள் விவரங்களைப் பெற்று உதவுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!