இந்தியா

இது புதுசு...பிளாஸ்டிக் பாட்டிலில் பஸ் ஸ்டாப்..

இது புதுசு...பிளாஸ்டிக் பாட்டிலில் பஸ் ஸ்டாப்..

Rasus

ஹைதரபாத்தில் வித்தியாசமான முறையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பாட்டில்களைக் கொண்டு தனியார் நிறுவனத்தால் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உபயோகத்திற்குப் பிறகு அவற்றை அப்படியே மக்கள் குப்பையில் வீசுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மட்கும் தன்மையற்றவை என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்தும், மூங்கில் கம்புகளை வைத்தும் அழகான பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. பேம்பூ ஹவுஸ் இந்தியா எனும் தனியார் நிறுவனத்தால் இந்த பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் நிறுவனர் பிரசாத் லிங்கம் கூறும்போது, பழைய பொருட்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 1000 பழைய பாட்டில்களை வாங்கினேன். அதனை வைத்து 8 அடியில் இந்த பஸ் ஸ்டாப்பை உருவாக்கியுள்ளோம். இதற்கு 2 முதல் மூன்று நாட்கள் ஆனது. பாட்டில்களுக்கு இடையே ஓட்டை போடப்பட்டுள்ளது. இதனால் காற்று எளிதாக உள்ளே செல்வதால் அதன் கீழ் இருப்பவர்களுக்கு புழுக்கம் இருக்காது. சாதாரண ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்க இரண்டு அல்லது மூன்று லட்சம் முதல் செலவாகும். ஆனால் இதற்கு வெறும் 15,000 மட்டுமே செலவானது என்றார்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாப்பை அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.