இந்தியா

கர்நாடகாவில் அமைகிறதா தொங்கு சட்டசபை?

webteam

கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. 

இந்த தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள்  பதிவாயின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு  இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. 

ஒன்பதரை மணி நிலவரப்படி பாஜக 93 இடங்களிலும் காங்கிரஸ் 79 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. இதனால் தொங்கு சட்டசபைதான் உருவாகும் என தெரிகிறது.

ஏற்கனவே கருத்துக்கணிப்பு முடிவுகளும் தொங்கு சட்டசபைதான் அமையும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.