சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு உண்டியல் வருவாய் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. மகர விளக்கு பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று நடை அடைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் தேவசம்போர்டுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நெய் மற்றும் அரவணை விற்பனை மூலம் 263 கோடியே 78 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்தது.
ஆனால், இந்த ஆண்டு போராட்டம் காரணமாக ஆண்டு வருவாய் 168 கோடியே, 12 லட்சம் ரூபாய் மட்டுமே சேர்ந்ததாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது தேவசவம்போர்டுக்கு 95 கோடியே 65 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.