தாமிர பாம்பு PT
இந்தியா

2000 கி.மீ தூரம் பயணித்த அதிசய பாம்பு! எப்படி இவ்வளவு தூரம் பயணித்தது தெரியுமா? ஆச்சர்ய தகவல்...

Jayashree A

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லவேண்டும் என்றால் மனிதரான நமக்கே அலுப்பாக இருக்கும். ஆனால் ஒரு பாம்பு தான் வசிக்கும் இடத்தை விட்டு சுமார் 2000 கி.மீ கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? என்ன? எங்கே? எப்போ நடந்தது? என்பதை பார்க்கலாம்.

பாம்பு ஆராய்சியாளர்கள் சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் அரியவகை இனமான, ’கிழக்கு வெண்கல மரப்பாம்பு’ சிலவற்றை கண்டுபிடித்தனர். இதன் உடல் தாமிர நிறத்தில் இருக்கும். பொதுவாக இது குளிர் பிரதேசங்களில் வாழ்பவை. விஷமற்றவை. இந்த வகை பாம்பு இந்தியாவின் அண்டை நாடுகளில் மற்றும் அசாம் பகுதிகளில்தான் வாழும்.

அண்டைநாட்டைச்சேர்ந்த இந்த வகைப்பாம்பு சூரத்தில் அதுவும், வீடுகளைச்சுற்றிய நிலப்பரப்பில் காணப்படுவது எப்படி என்று பாம்பு ஆராய்சியாளார்கள் தங்களது ஆய்வினை குஜராத்தில் மேற்கொண்டனர். இறுதியாக, தங்களது ஆராய்சியின் முடிவின்படி அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பொருட்கள் அல்லது போக்குவரத்து மூலம் இந்த வகை பாம்புகள் சூரத்திற்கு வந்திருக்கலாம் என்கின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பாம்பு வகைகளை ஆராயும்பொழுது மொத்தம் 64 வகையான பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் வெண்கல மரப்பாம்பையும் சேர்த்து 65 வகையான பாம்பினங்கள் இருப்பதாக ஆராய்சியாளார்கள் கணக்கிட்டுள்ளனர்.