இந்தியா

ஆரோக்கிய சேது செயலியில் தடுப்பூசி நிலைத் தகவலை அப்டேட் செய்வது எப்படி?

ஆரோக்கிய சேது செயலியில் தடுப்பூசி நிலைத் தகவலை அப்டேட் செய்வது எப்படி?

JustinDurai

ஆரோக்கிய சேது செயலியில் தடுப்பூசி நிலைத் தகவல் குறித்து பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்து காணலாம்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களுடைய ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் 1 நீல நிற டிக் குறி தோன்றும். இரண்டு டோஸ்கள் முழுமையாக பெற்றவர்களுடைய ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் 2 நீல நிற டிக் குறிகள் தோன்றும். தடுப்பூசி பெற்றுக் கொண்டதை Cowin இணையதளம் மூலம் சரிபார்த்த பிறகு இரண்டாம் டோஸ் பெற்று 14 நாட்களுக்கு பின்னர் இது தோன்றும். 

புதுப்பிக்கப்பட்ட சுய மதிப்பீட்டை செய்யாத அனைத்து ஆரோக்கிய சேது பயனர்களுக்கும் தடுப்பூசி நிலையை பதிவேற்றவும் என்ற விருப்பத்தேர்வு வழங்கப்படும். ஆரோக்கிய சேது செயலியில் சுயமதிப்பீடு செய்து கொண்டபிறகு, ஒரு டோஸ் தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு 'Partially Vaccinated (Unverified)' என்றும், 2 டோஸ் பெற்றவர்களுக்கு 'Vaccinated (unverified)' என்று அவர்களது ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் தோன்றும். Cowin இணையதளத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னர் OTP அடிப்படையில் Unverified நிலை 'Verified' நிலையாக அறிவிக்கப்படும்.