இந்தியா

34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை!

34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை!

webteam

சில நிஜக் கதைகள் ஹாரர் சினிமாக்களின் கற்பனையையும் மிஞ்சி விடுகிறது. சிறுமிகள் தங்கும் விடுதியில் நடந்திருக்கும் இந்த கொடூர கதையும் அப்படித்தான்!

மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாக அறிக்கை சமர் பித்தது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது. 

இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை இன்று வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டினர். எலும்புக் கூடுகள் ஏதும் சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாநில பெண்கள் ஆணைய தலைவி தில்மானி மிஸ்ரா கூறும்போது, ‘பாட்னா மருத்துவமனையில் சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள் உடல் நலம் தேறி வருகிறார்கள். ஆனால், மனரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து மீள்வதற்கு நாட்கள் ஆகலாம். பாலியல் வன்கொடுமையை எதிர்த்த சிறுமிகளை பலமாகத் தாக்கியுள்ளனர். அவர்களை பட்டினி ப் போட்டுள்ளனர். சூடு வைத்துள்ளனர். காலணியால் அடித்துள்ளனர். ஒரு சிறுமியை அடித்தே கொன்று உடலை எங்கோ வீசியுள்ளனர். 

மற்றொரு சிறுமி, கண்ணாடி ஜன்னலை உடைத்து கையை கீறி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால் தப்பித்துவிட்டார். அவர் கையில் இன்னும் காயம் இருக்கிறது. காப்பகத்தை, அதிகாரிகள் பார்வையிட வரும்போது, சிறுமிகள் யாரும் புகார் தெரிவித்துவிடக் கூடாது என்ப தற்காக, அவர்கள் அருகிலேயே நின்றுள்ளனர். அவர்களின் துன்புறுத்தலுக்கு பயந்து எந்த புகாரையும் சிறுமிகள் சொன்னதில்லை. இது அதிர்ச் சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அரசியல்வாதிகள் சிலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.