இந்தியா

2 மணி நேரம் தாமதமாக கொரானா மருந்து கொடுத்ததால் நோயாளி பரிதாப மரணம்.. குஜராத்தில் சோகம்

2 மணி நேரம் தாமதமாக கொரானா மருந்து கொடுத்ததால் நோயாளி பரிதாப மரணம்.. குஜராத்தில் சோகம்

webteam

குஜராத் மாநிலம் பாவ் நகரைச் சேர்ந்தவர் தர்ஷக் ஷா என்பவர், தன்னுடைய மாமனார் ஆள்மாறாட்டத்தால் கொரோனா தடுப்பு மருந்தை் கொடுக்க இரண்டு மணி நேரம் தாமதமானதால் உயிரிழந்துள்ளார் என்று காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக ஹோமியோபதி மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட சந்திரகாந்த் ஷா (வயது 73), ராஜ்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு முக்கிய மருந்தைக் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரம் தாமதமானதால் அவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருமகன் தர்ஷக் ஷா குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக ஹோமியோபதி மருத்துவர்மீது காவல்துறையினர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்திரகாந்த் ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி கண்டறியப்பட்டது. விசாரணையில், சந்திரகாந்த் என்ற பெயரில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை பிம்ஸ் மருத்துவமனை பார்மஸில் வாங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் பின்னர் அவரது பெயரைப் பயன்படுத்தி மருத்துவர் கட்டாரியா வாங்கி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.