விடுமுறைக்காக வெளியூர் சென்ற நேரத்திலும் இளைஞர் ஒருவர் தான் செல்லமாக பார்த்து வந்த, தன் வீட்டு தெருவில் இருந்த செல்லப்பிராணிக்கு உணவு கொடுத்த விதம் காண்போரை நெகிழ்ச்சியடைச் செய்தது.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் வர்கீஸ் உம்மன். இவர் தெருநாய் ஒன்றுக்கு தினந்தோறும் உணவளித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், உணவு கொடுப்பதை தடை செய்யவில்லை. இந்தநிலையில், வர்கீஸ் உம்மன் ஒரு நாள் வெளியூர் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், செல்லப் பிராணிக்கு உணவளிக்க என்ன செய்வது எனத் தவித்திருக்கிறார். அப்போது அவருக்கு புதிய யோசனை ஒன்று உதயமானது.
ஸூமாட்டோ, உபர் போன்ற உணவு டெலிவரி சேவையை பயன்படுத்தி தனது செல்லப் பிராணியின் உணவுக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி, 3 வேளையும் மொபைல் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்து, கொடுக்க வைத்தார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், உணவு கொண்டு வந்த நபர், உணவை எங்கே சென்று கொடுப்பது என கேட்க தனது வீட்டின் வாசலில் வைத்துவிடுமாறு வர்கீஸ் கூறியுள்ளார்.
அந்த உணவை தனது வீட்டு காவலாளி மூலம் செல்லப் பிராணிக்கு கொடுத்துள்ளார். தான் ஊரில் இல்லாவிட்டாலும், தான் பாசம் வைத்திருந்த தெரு நாய்க்கு உணவு வழங்கிய மனிதநேயம் நிகழ்வு கேரளாவில் வைராலாகி வருகிறது.