அரசாணை முகநூல்
இந்தியா

‘கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத் துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை’ - ஆந்திராவில் அரசாணை!

“கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை” என ஆந்திர மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

PT WEB

கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என ஆந்திர மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் உள்ள சில கோயில்களில் இந்து சம்பிரதாயங்கள் மீது, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆதிக்கம் இருப்பதால் பூஜை, நைவேத்திய வேளைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

சமய, சம்பிரதாய விஷயங்களில் தவறு நடக்கக் கூடாது என ஆகம வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அரசு அதிகாரிகள் சிலர் இதை கண்டு கொள்ளாமல், அவர்களது வசதிக்கேற்ப கோயில் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனக் கூறி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்து கோயில்களிலும் ஆகம விதிகளின்படி அந்தந்த சம்பிரதாயங்களை கடைபிடிக்கலாம் என்று கோயில் அர்ச்சகர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் வகையிலான அரசாணையை பிறப்பித்துள்ளது.