இந்தியா

ஜம்மு ஐஐடி முழுவதும் இந்தித் திணிப்பு: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

ஜம்மு ஐஐடி முழுவதும் இந்தித் திணிப்பு: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

Veeramani

ஜம்மு ஐஐடி-யில் இந்தித் திணிப்பு என்பது வீடு எரியும்போது சிகரெட்டுக்கு நெருப்பு எடுக்கிற செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியிருக்கும் கடிதத்தில்,“ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக உடைத்து ஒன்றிய பிரதேசங்களாக மாற்றிய காயம்கூட இன்னும் ஆறவில்லை, அதற்குள் ஜம்மு ஐஐடியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்கப்படும் எல்லா தகவல்களிலும் இந்தி திணிக்கப்படுகிறது. அந்த பிராந்தியத்தில் சர்ச்சைகளை எழுப்புவதற்கான நேரம் இதுவல்ல, பன்முகத்தன்மைதான் மக்களை ஒற்றுமையாக வைத்திருக்க தேவையானதாகும். கல்வி வளாகங்கள் அந்த செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கவேண்டும்.

இந்தியில் தகவல்கள் வழங்கப்படுவதை, இந்தி தெரியாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆங்கிலத்தை விடவும் பெரிய எழுத்துருவில் இந்தி பயன்படுத்தப்படுவது, இந்தி தெரியாதவர்களை தூண்டக்கூடும். எனவே ஐஐடி ஜம்முவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபோன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் என தலையிடவேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.