இந்தியா

இமாச்சல் தேர்தல்: பா.ஜ. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

webteam

இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வெளியிட்டுள்ளன. 
68 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் சுஜன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 59 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் தற்போது முதலமைச்சராக உள்ள வீர்பத்ரசிங் அர்கி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும். 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படும்