இந்தியா

100அடி பள்ளத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து

100அடி பள்ளத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து

webteam

ஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 27 பள்ளி குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சல் பிரதேசம் காங்ரா பகுதியில் உள்ள கார்ஜ் எனும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப்பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்‌ வீட்டிற்குத் திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தை இயக்கிய மதன்லால் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும், அதிகபட்சமாக பள்ளிக் குழந்தைகள் இருந்ததாகவும் தெரிகிறது. 

இதனையடுத்து விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாஹூர் அறிவித்துள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.