இந்தியா

சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்கள் இந்தியாவில்தான் அதிகம்

சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்கள் இந்தியாவில்தான் அதிகம்

Rasus

உலகிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்காத மக்கள் இந்தியாவில்தான் அதிகம் உள்ளனர் என்று சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மார்ச் 22-ம் தேதி வரும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அந்த ‘வைல்ட் வாட்டர்’ என்ற அறிக்கையில் இந்தியாவில் வாழும் 6 கோடியே 30 லட்சம் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என கூறப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. சுத்தமான குடிநீர் கிடைக்காததால், காலரா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இந்தப் பகுதிகளில் அதிகம் பரவுகிறது. இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் வறட்சி காலத்தில் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடக்கவேண்டியுள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியா, தனது குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்து அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீரை உறுதி செய்வது மிகப்பெரிய சவால் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 66 கோடியே 30 லட்சம் பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இருக்கின்றனர் எனவும் அதில் 52 கோடியே 20 லட்சம் பேர் கிராமங்களில் வாழ்கின்றனர் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.