இந்தியா

உயர் நீதிமன்ற நிபந்தனை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான ஆர்யன் கான்

உயர் நீதிமன்ற நிபந்தனை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான ஆர்யன் கான்

kaleelrahman

மும்பை உயர் நீதிமன்ற நிபந்தனையின்படி இன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் ஆஜரானார்.

அக்டோபர் 3ம் தேதி மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் நடந்த 'ரேவ் பார்ட்டி'-யில் வைத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதில் மும்பை கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்க கடந்த அக்டோபர் 29ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு 14 நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

இதில், ஓவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காலை 11- 02 மணிக்குள் ஆரியன் கான் ஆஜராகி கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இன்று மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜரானார்.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் விதித்துள்ள 14 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஆரியன் கான் மீறினால் அவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி போதைப் பொருள் தடுப்பு பிரிவு முறையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.