இந்தியா

ஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்!

ஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்!

webteam

’கால் கேர்ள்ஸ்’ என்று முன்னணி ஹீரோயின்களை புகைப்படங்களை காண்பித்து, பணம் வசூலித்து ஏமாற்றிய முன்னாள் பிரிசின்பல் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர், விளம்பரங்களுக்கான இணையதளம் ஒன்றை உருவாக்கினார். அதில் பல்வேறுவகையான வியாபார விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன. கூடவே, முன்னணி தெலுங்கு நடிகைகளின் புகைப்படங்களுடன் ’கால் கேர்ள்ஸ்’ என்ற விளம்பர மும் இடம்பெற்றிருந்தது. அதில் முன்னணி தெலுங்கு நடிகைகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன, அதைக் கண்ட சில சபலப் புத்திக் காரர்கள், அதில் குறிப்பிட்டிருந்த போன் நம்பருக்கு பேசினர். பேசியவர்களிடம், ‘40 ஆயிரம், அறுபதாயிரம் என ரேட் பேசியிருக்கிறார் கணேஷ். பணத்தை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் பண்ண வேண்டும் என்றும் அதற்குப் பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி பலர் பணத்தை அவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர். பணம் வந்த பின் அவர்களின் போன் அழைப்பை அவர் ஏற்பதில்லை. இப்படி அவர் தொடர்ந்து பலரை ஏமாற்றி வந்துள்ளார். இதை வெளியில் சொல்லவும் முடியாமல் புகாரும் கொடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்ட பலர் தர்மசங்கடத்துக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் அந்த இணையதளத்தின் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த குணசித்திர நடிகை ஒருவர், தற்செயலாக அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தீவிரமாக களமிறங்கிய போலீசார், கணேஷை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் கணேஷ், பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. தில்சுக் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பிரின்சிபலாகவும் பணியாற்றி இருக்கிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த தொழில் இறங்கியுள்ளார்.

‘தனியாக நிறுவனம் தொடங்கி அதிக பணத்தை இழந்துவிட்டேன். அதை மீட்பதற்காக இந்த வேலையில் இறங்கினேன். நான் அதிகமாக யாரையும் ஏமாற்றவில்லை. வெறும் 1.8 லட்சம் ரூபாயை மட்டுமே ஏமாற்றியும்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கணக்கில் எட்டு லட்சம் ரூபாய் வரவாகி இருக்கிறது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.