இந்தியா

ஹெலிகேம் மூலம் வரி ஏய்ப்பை கண்டுப்பிடிக்கும் புதுவை முதல்வர்

ஹெலிகேம் மூலம் வரி ஏய்ப்பை கண்டுப்பிடிக்கும் புதுவை முதல்வர்

webteam

ஹெலிகேம் மூலம் சொத்துக்களை கண்காணித்து, மதிப்பீடு செய்யும் திட்டம் புதுச்சேரியில் முதன்முறையாக தொடக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் வரி ஏய்ப்பு செய்பவர்களையும், சொத்துக்களை பினாமி பெயரில் வைத்துக்கொண்டு மோசடி செய்பவர்களையும் கண்டுபிடிக்க புதிய திட்டம் ஒன்றை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி, ஹெலிகேம் உதவியை கொண்டு ஒருவரது சொத்துக்கள் முழுவதும் படமெடுக்கப்படும். பின்னர் அந்த சொத்துகளின் மதிப்பு என்ன, அவை என்னவாக பயன்படுத்தப்படுகிறது என்று ஆராயப்படும். மேலும் அதற்கான வரிகள் முறையாக செலுத்தப்படுகிறதா என்று வருவாய்த்துறை மூலம் கண்டறியப்படும். இந்தத் திட்டம் குறித்து கூறிய நாராயணசாமி, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, முறையாக வரி வசூலிக்கவே ஹெலிகேம் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.