மும்பை முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா | தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை... பாதிப்படைந்த இயல்பு வாழ்க்கை!

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மாநகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மும்பை மாநகரில் 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒருபகுதியாக மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், ஆங்காங்கே போக்குவரத்து முடங்கியுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவு ரயில் உள்ளிட்ட ஐந்து ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். தொடர் மழையால், சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனிடையே, வருகிற 10ஆம் தேதி வரை மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.