இந்தியா

#முக்கியச் செய்திகள் | சென்னையில் தீ விபத்து...மலேசிய அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்..

webteam

சென்னை மாதவரத்தில் 15 மணிநேரத்திற்கு மேலாக தீப்பற்றி எரியும் ரசாயனக் குடோன். தீயை அணைக்கும் பணியில் விடிய விடிய போராடிய வீரர்கள்

மாதவரம் தீ விபத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக உரிமையாளர் தகவல். ரசாயன பேரல்கள் வெடித்துச் சிதறுவதால் தீயை அணைப்பதில் நீடிக்கிறது சிக்கல்

தமிழகம் முழுவதும், மீன் விற்பனை கடைகளில் சோதனை நடத்த உத்தரவு. மதுரையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்பட்டதையடுத்து நடவடிக்கை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடக்கம். டெல்லி வன்முறை, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கங்களில் முக்கியமானது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

டெல்லியில் வன்முறை ஏற்பட்டது எப்படி? உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

ஆப்கானிஸ்தானிலிருந்து 14 மாதங்களில் படைகளை வாபஸ்பெற அமெரிக்கா ஒப்பந்தம். அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் மீண்டும் வருவோம் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

மலேசிய அரசியலில் உச்சக்கட்ட குழப்பம். முஹையதீன் யாசினை பிரதமராக மன்னர் அறிவித்ததற்கு முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது எதிர்ப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு. இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல்

மகளிர் 20ஓவர் உலகக்கோப்பை போட்டி: இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி