தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திணறும் அதிமுக, திமுக அணிகள். அதிமுகவுடன் பாஜக, தேமுதிகவும், திமுகவுடன் காங்கிரஸ், இடதுசாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் மீண்டும் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை.15 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தகவல்.
அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் தாமதமோ, பிரச்னையோ இல்லை.பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேட்டி.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்.ஓரிரு நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கே.எஸ்.அழகிரி நம்பிக்கை.
கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகளை கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.
சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என வைகோ உறுதி.திமுக முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனையைத் தொடர்ந்து பேட்டி.
அமமுக தலைமையை ஏற்று வந்தால் அதிமுக-பாஜகவுடனும் கூட்டணி அமையும் என டிடிவி தினகரன் விளக்கம்.அமமுக தலைமையை ஏற்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் பதில்.
புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல். தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பது குறித்து ரங்கசாமி இன்று முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு.
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி உள் இடதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது என மனுவில் கேள்வி.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கோவின் தளத்தில் பதிவு.60 வயதுக்கு மேற்பட்டோர் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைப்பு.பாதுகாப்புப் பணிக்கு 330 துணை ராணுவப் படை கம்பெனிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
திருப்பூரில் ஏடிஎம் இயந்திரமே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் அதிரடியாக கைது.
டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார்.பெண் எஸ்பியிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு.
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அபார வெற்றி.31 மாவட்ட பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய அரசு குறித்து விமர்சனம்.