இந்தியா

சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!

webteam

19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்.சென்னை, கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன.

கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அதிமுக தீவிரம்.பாமவுக்கு 23 இடங்கள் ஒதுக்கிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு.

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.நடப்பு சட்டப்பேரவை தொடரின் இறுதி நாளில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை.

தமிழகம் மற்றும் புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.நள்ளிரவில் திடீரென சாலையில் நடந்து சென்றதால் பாஜக தொண்டர்கள் உற்சாகம்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்.மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு பின் நம்பிக்கை பிறந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என ABP C-VOTER கருத்துக்கணிப்பு.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெரும்பாலானோர் ஆதரவு.

தமிழக முதல்வரை ரிமோட் மூலம் இயக்குவது போல் தமிழக மக்களையும் இயக்க நினைக்கிறார் பிரதமர் மோடி. நாங்குநேரியில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

கூட்டணி அமைப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார் சரத்குமார். தாமே முதல்வர் வேட்பாளர் என கமல்ஹாசன் உறுதி.

3 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு.