இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிப்பு. இயல்பு நிலை திரும்பினால் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனவும் அமித் ஷா விளக்கம்.

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா கைது. ராணுவ அதிகாரிகளுடன் ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என, காங்கிரஸ் கண்டனம். கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாநிலங்களவை கொறடா உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக வரவேற்பு. ஜனநாயக படுகொலை என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம். நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்க அரசு அறிவிப்பு.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் 251 ரன்கள் வித்தியாசத்தில் அபாரம்.