பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு. வருகிற 18ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பு.
சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது மத்திய அரசு. ஒரு டோஸ் தடுப்பூசி 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.
கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை. தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என அறிவுறுத்தல்.
கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மருத்துவர்கள், செவிலியர் தயக்கம். மருந்து குறித்த சந்தேகங்கள் தீர்ந்த பின்னரே எடுத்துக் கொள்வோம் என விளக்கம்.
வேளாண் சட்ட விவகாரத்தில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்.சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா.? என்றும் மத்திய அரசுக்கு கேள்வி.
தலைநகர் டெல்லி உட்பட 10 மாநிலங்களுக்கு பரவியது பறவைக் காய்ச்சல்.காகங்கள், பறவைகள், வாத்துகள் மடிவதால் அச்சம்.
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசின் உத்தரவுக்கும் பாராட்டு.
முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும். பாரதிய ஜனதாவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.
மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி.காட்சிகளை பகிர வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு வேண்டுகோள்.
ஜோ பைடன் பதவியேற்புக்கு முன் வலதுசாரி தீவிரவாதிகள் ஆயுத போராட்டங்கள் நடத்தக்கூடும் என எச்சரிக்கை. தலைநகர் வாஷிங்டனில் 15 ஆயிரம் துருப்புகளை நிறுத்தப் போவதாக தேசிய காவல் படையின் தலைவர் அறிவிப்பு.
ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பை தகர்த்தது இந்திய அணி. விஹாரி, அஸ்வின் இணை தடுப்பு சுவராக மாறி அபாரம்.