இந்தியா

TopNews | சிஏஏ எதிர்ப்பு போராட்டம்; உச்சம் பெறும் தங்கம் விலை... முக்கியச் செய்திகள்!

webteam


கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து. 45 கிராமங்களில் 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையவிருந்த திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு.

இந்தியாவில் நிலவும் மத சுதந்திர பிரச்னை குறித்து பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார். வெள்ளை மாளிகை தரப்பில் தகவல்

ஷாஹீன் பாக் பகுதியைத் தொடர்ந்து டெல்லியில் மேலும் ஒரு இடத்தில் பெண்கள் போராட்டம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இரவு முழுவதும் முழக்கம்

அயோத்தியில் ராமர் கோயில் மூன்றரை ஆண்டுகளில் கட்டப்படும். கோயிலை அமைக்கவுள்ள அறக்கட்டளையின் பொருளாளர் உறுதி

விசாரணைக்கு நேரில் வந்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனு

சிங்கப்பூருக்கு பயணம் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு நடவடிக்கை

தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கத்தின் விலை. 40 நாட்களில் சவரனுக்கு 2ஆயிரத்து 464 ரூபாய் அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கப்படிமங்கள் இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை. இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் தகவல்.