இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்கான தடை தொடருமா? மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு.

நெல்லை முன்னாள் மேயர் வழக்கில் கைதான கார்த்திகேயனுக்கு ஆகஸ்ட் 15 வரை நீதிமன்றக்  காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டம்.

அத்திவரதர் சயன கோல தரிசனம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நின்றக் கோல தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டிய இருப்பதால், தரிசன நேரம் இன்று குறைப்பு.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள். தமிழகமெங்கும் நீர் நிலைகளில் முன்னோருக்கு திதி கொடுத்து சிறப்பு வழிபாடு.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு, மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து 99 பேரும், 84 பேர் எதிர்த்தும் வாக்களிப்பு - அதிமுக வெளிநடப்பு

12ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம் - தமிழக அரசு நடவடிக்கை

ஜெயலலிதா மரண விவகாரத்தில் எதையோ மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சி என உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குற்றச்சாட்டு

மாயமான காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரம்.அதிகாரிகள் சித்ரவதை செய்ததாக எழுதிய கடிதத்துக்கு வருமானவரித்துறை மறுப்பு.

உன்னாவ் பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய சதியா என சிபிஐ விசாரிக்கும். எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை.