இந்தியா

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி சிறப்பு போனஸ்..  ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவிப்பு

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி சிறப்பு போனஸ்..  ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவிப்பு

JustinDurai

ஹெச்.சி.எல். நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல்., 2020-ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு காரணமான உலகெங்கிலும் உள்ள தங்களது நிறுவன பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் போனஸ் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஹெச்.சி.எல். வெளியிட்ட அறிக்கையில், ''எங்கள் ஊழியர்களே நிறுவனத்திற்கு மிக்கபெரிய சொத்து. சவாலான கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஆர்வமுடனும் ஊழியர்கள் பணியாற்றினார். அதன் பலனாகவே 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியுள்ளோம். இந்நேரத்தில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' எனக் கூறியுள்ளது.

இதற்கிடையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1000 ஊழியர்களை, அதன் நாக்பூரில் உள்ள MIHAN கேம்பஸில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணியமர்த்தலானது அடுத்த சில மாதங்களில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு இந்த வளாகத்தில் 2000 பேரினை கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரை, லக்னோ மற்றும் நாக்பூர், விஜயவாடா உள்ளிட்ட மையங்களில் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதோடு ஹெச்.சி.எல்.லில் தங்களது பணியினை தொடங்க ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பிக்கும் படியும் ஹெச்'சி'எல்' கூறியுள்ளது.