இந்தியா

”பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்” -ஆர்யன் கான் ஜாமீனின் நிபந்தனைகள்

”பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்” -ஆர்யன் கான் ஜாமீனின் நிபந்தனைகள்

நிவேதா ஜெகராஜா

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில், ஆர்யன் கானுக்கு மும்பை நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த நிபந்தனைகள் என்னென்ன என்பது, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அக்.3-ம் தேதி சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய திடீர் ஆய்வில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்டிருந்த அவரது 2 நண்பர்களுக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. எனவே ஆர்யன் கான் தரப்பு தொடர்ந்து மனு தாக்கல் செய்துவந்தனர். அதன் விளைவாக கைது செய்யப்பட்டு 25 நாட்களுக்குப் பிறகு நேற்று ஆர்யன் கானுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆர்யன் கானுக்காக மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன் கானின் ஜாமீனில் அவருக்கு 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. அவற்றில் முக்கியமாக ‘மும்பைக்கு வெளியே பயணிக்க வேண்டுமெனில் விசாரணை அதிகாரியிடம் விவரங்களை அளிக்க வேண்டும்; பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்; சாட்சியங்களை கலைக்க முயற்சிக்க கூடாது; நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது’ போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்யன் கான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை அழைப்பதற்காக ஷாருக்கான் நீதிமன்றத்துக்கு விரைந்துள்ளார்.