ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தான் போட்டியிட்ட கர்னால் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றன. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 105 பெண்கள் உள்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மனோகர் லால் கட்டார், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.